பதுளையில் ஏற்பட்ட காட்டுத் தீயை விமானப்படை அணைத்தது

பெப்ரவரி 20, 2023

கந்தேபுஹுல்பொல வனப்பகுதியில் அண்மையில் ஏற்பட்ட பாரிய காட்டுத்தீயை இலங்கை விமானப்படையினர் அணைத்துள்ளனர்.

கந்தேபுஹுல்பொல வனப்பகுதியில் ஏற்பட்ட தீயானது தியத்தலாவ விமானப்படை யுத்த பயிற்சி பாடசாலையின் பணியாளர்கள் மற்றும் அவசர அனர்த்த மீட்பு குழுவினர் ஆகியோரின் உதவியுடன் அணைக்கப்பட்டது.

தீயை அணைக்க உதவுமாறு பதுளையில் உள்ள அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் வேண்டுகோளுக்கு இணங்க அதிகாரிகள் மற்றும் விமானப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைத்ததாக விமானப்படை ஊடகம் தெரிவித்துள்ளது.