தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை இலங்கை கடற்படை கைப்பற்றியது

பெப்ரவரி 21, 2023

கொழும்பில் நடைபெற்ற தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை கடற்படை சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. கடற்படையின் ஆடவர் மல்யுத்த அணி தொடர்ச்சியாக 20வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளதாக கடற்படை ஊடக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பு டொரிங்டன் பிளேஸ் உள்விளையாட்டு அரங்கில் இந்த தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் பெப்ரவரி,18 மற்றும் 19 (2023) ஆகிய திகதிகளில் நடைபெற்றது.

இதில் கடற்படை அணி 05 தங்கப் பதக்கங்கள், 2 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 3 வெண்கலப் பதக்கங்களை பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றனர்.

இதேவேளை, கடற்படையின் ஒட்டுமொத்த பதக்கப் பட்டியலில் கடற்படை மகளிர் அணி 02 தங்கம், 01 வெள்ளி மற்றும் 02 வெண்கலப் பதக்கங்களை பெற்றுள்ளதாகவும் கடற்படை வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.