74வது தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் 2023 பட்டத்தை இலங்கை
விமானப்படை மகளிர் அணி கைப்பற்றியது

பெப்ரவரி 22, 2023

இலங்கை விமானப்படையின் மகளிர் மல்யுத்த வீராங்கனைகள் 74வது தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் 2023 போட்டியில் சம்பியனாகத் தெரிவானார்கள்.

கொழும்பு டொரிங்டன் பிளேஸ் உள்விளையாட்டு அரங்கில் இந்த தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றது.

விமானப்படை மகளிர் மல்யுத்த வீராங்கனைகள் ஐந்து தங்கம், ஐந்து வெள்ளி மற்றும் மூன்று வெண்கலப் பதக்கங்களை வென்று தொடர்ந்து 6வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றதாக விமானப்படை ஊடக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.