தேசிய பாதுகாப்பு ஆய்வுகள் நிறுவன ஊழியர்களின்
தலைமைத்துவ பண்புகளை மேம்படுத்துதலுக்கான திட்டங்கள் முன்னெடுப்பு

பெப்ரவரி 23, 2023

இலங்கை தேசிய பாதுகாப்பு ஆய்வுகள் நிறுவனத்தினால் அதன் பணியாளர்களுக்கான தலைமைத்துவ பண்புகளை மேம்படுத்துதல் எனும் தொனிப்பொருளிலான தலைமைத்துவ விரிவுரையொன்று முன்னெடுக்கப்பட்டது. பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் கேர்ணல் எம்.பி.பி நளின் ஹேரத் (ஆர்.எஸ்.பி.) அவர்களினால் இந்த தலைமைத்துவ விரிவுரைகள் நிகழ்த்தப்பட்டது.இதன்போது ஐந்து முக்கிய தலைமைத்துவ பண்புகளை உள்ளடக்கிய குணாதிசயம், அர்ப்பணிப்பு, தைரியம், நம்பிக்கை மற்றும் தொடர்பாடல் போன்ற தலைப்புகளில் விரிவுரைகள் வழங்கப்பட்டன.