இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான 7வது வருடாந்த பாதுகாப்பு உரையாடல் அண்மையில் நடைபெற்றது

பெப்ரவரி 24, 2023

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான 7வது வருடாந்த பாதுகாப்பு உரையாடல் இந்தியாவின் புதுடெல்லியில் அண்மையில் நடைபெற்றது. பாதுகாப்பு உரையாடலில் ஜெனரல் கமல் குணரத்ன தலைமையிலான குழுவினர் கலந்து கொண்டனர். இந்திய பாதுகாப்பு செயலாளர் கிரிதர் அர்மானே மற்றும் ஜெனரல் கமல் குணரத்ன ஆகியோர் கூட்டத்திற்கு தலைமை தாங்கினர்.