இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான பொதுவான பார்வை” என்ற புத்தகம் வெளியீடு

பெப்ரவரி 28, 2023

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் இணைந்து தொகுத்த “இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான பொதுவான பார்வை” என்ற புத்தகத்தின் வெளியீட்டு நிகழ்வு நேற்று (பெப்ரவரி 27) கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்றது.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மேதகு ஜூலி ஜே அவர்களை வரவேற்றார். இதன்போது புத்தகத்தின் முதல் பிரதி திருமதி சுங்கிடம் வழங்கப்பட்டது.

பாதுகாப்பு ஆய்வுகளுக்கான ஆசிய-பசிபிக் மையத்தின் இயக்குனர் அமெரிக்க கடற்படையின் ரியர் அட்மிரல் (ஓய்வு) பீட்டர் ஏ குமடொடோ இந்நிகழ்வில் சிறப்புரை ஆற்றினார்.

கலாநிதி ஹரிந்த விதானகே அவர்களால் தொகுக்கப்பட்ட இந்தப் புத்தகம், இந்திய-பசிபிக் மூலோபாயம் குறித்த பல்வேறு கண்ணோட்டங்களில் இருந்து பிராந்திய ஆய்வாளர்கள் மற்றும் அமெரிக்க நிபுணர்களின் கட்டுரைகள் இப் புத்தகத்தில் உள்ளடக்கியுள்ளதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.