ரஷ்யத் தூதுவர் பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்

மார்ச் 01, 2023

புதிதாக நியமிக்கப்பட்ட இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் அதிமேதகு லெவன் எஸ். ட்ஜகார்யன், பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை மரியாதை நிமித்தம் சந்தித்தார்.

கோட்டே, ஸ்ரீ ஜயவர்தனபுர பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் அமைந்துள்ள இலங்கை பாதுகாப்பு அமைச்சிச்சுக்கு முதல் முறையாக விஜயம் செய்த புதிய ரஷ்ய தூதுவர் தலைமையிலான தூதுக்குழுவிற்கு ஜெனரல் குணரத்ன அவர்களினால் வரவேற்பு வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ஜெனரல் குணரத்ன மற்றும் ரஷ்ய தூதுவர் லெவன் எஸ். ட்ஜகார்யன் ஆகியோரிக்கிடையில் பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் இருதரப்பு பரஸ்பர விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

இலங்கைக்கான ரஷ்ய தூதுவராக நியமிக்கப்பட்ட பின்னர் கடந்த நவம்பரில் இலங்கைக்கு வருகை தந்த அதிமேதகு ட்ஜகார்யன் அவர்கள், ஜனாதிபாதி கௌரவ. ரணில் விக்ரமசிங்க அவர்களிடம் கடந்த ஆண்டு நவம்பர் 11ஆம் திகதி தனது நியமனமக் கடிதத்தை கையளித்தார்.

இதேவேளை, பாதுகாப்பு செயலாளர் மற்றும் ரஷ்ய தூதுவருக்கிடையிலான சந்திப்பினை நினைவுகூரும் வகையில் நினைவுச் சின்னங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டது.

இலங்கை பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி மற்றும் இலங்கைக்கான ரஷ்ய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.