துபாய் கிராண்ட் பிரீ தடகளப் போட்டியில் இராணுவ வீரர் அனில் பிரசன்ன
தங்கப் பதக்கம் வென்றார்

மார்ச் 02, 2023

ரணவிரு சேவா அதிகார சபையின் விளையாட்டுக் குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆனை அதிகாரம் பெற்ற அதிகாரி II அனில் பிரசன்ன ஜயலத், 2023 பெப்ரவரி 28 அன்று துபாயில் நடைபெற்ற கிராண்ட் பிரீ தடகளப் போட்டியில் T42 பிரிவை பிரதிநிதித்துவப்படுத்தி 100 மீ ஓட்டப்போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்றார்.

மேலும், இராணுவ ஆனை அதிகாரம் பெற்ற அதிகாரி II அனில் பிரசன்ன ஜயலத் எதிர்வரும் பாரா ஒலிம்பிக் போட்டியிலும் பங்குபற்ற உள்ளார் என ரணவிரு சேவா அதிகார சபை தெரிவித்துள்ளது.