கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த பெருவிழா கடற்படையினரின் உதவியுடன் வெற்றிகரமாக நடத்தப்பட்டது

மார்ச் 05, 2023

இந்திய-இலங்கை கடல் எல்லைக்கு அருகில் உள்ள கச்சத்தீவில் அமைந்துள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தின் வருடாந்த பெருவிழா கொழும்பு உதவி ஆயர் அருட்தந்தை அன்டன் ரஞ்சித் பிள்ளைநாயகம் அவர்களின் தலைமையில் யாழ்.மாவட்ட செயலாளர் ஏ. சிவபாலசுந்தரம் அவர்கள் மற்றும் கடற்படை கிறிஸ்தவ சங்கத்தின் அமைப்பாளர்களின் பங்களிப்பின் பெருந்திரளான இலங்கை மற்றும் இந்திய பக்தர்களின் பங்கேற்புடன், 2023 மார்ச் 03 மற்றும் இன்று (2023 மார்ச் 04) வெகு விமரிசையாக நடைபெற்றதுடன் இறுதி பூஜை நிகழ்விற்காக, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா அவர்களின் பிரதிநிதியாக வடக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் அருண தென்னகோன் அவர்கள் கலந்துகொண்டார்.

கச்சத்தீவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க புனித அந்தோணியார் தேவாலயம் கத்தோலிக்கர்களால் மிகுந்த பக்தியுடன் போற்றப்படுகிறது. கச்சத்தீவு புதிய தேவாலயம் இலங்கை கடற்படையினரால் அனைத்து மத நம்பிக்கைகள் மீதான பக்தி உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் கட்டப்பட்டது. வழமை போன்று இவ்வருடமும் விழாவை வெற்றிகரமாக நடத்துவதற்கு இலங்கை கடற்படையினர் உதவிகளை வழங்கினர்.

அதற்கமைவாக, இத்திருவிழாவை சிறப்பாகக் கொண்டாடும் வகையில், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் பேரில், வடக்கு கடற்படை கட்டளைத் தளபதியின் மேற்பார்வையில், இலங்கை கடற்படையினர் அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்தனர்.

அங்கு யாழ்.மாவட்ட செயலகம் மற்றும் நெடுந்தீவு பிராந்திய செயலகத்தின் ஒருங்கிணைப்புடன் பக்தர்களுக்கு குடிநீர், உணவு, சுகாதார வசதிகள், தற்காலிக வீதிகள் மற்றும் இறங்குதுறைகள், மின்சார வசதிகள், ஜீவாதார வசதிகள் கடற்படையால் வழங்கப்பட்டுள்ளதுடன் பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் மருத்துவ வசதிகளுக்கான மீட்ப்புக் குழுக்கள், சிகிச்சைக்காக மருத்துவ ஊழியர்களைக் கொண்ட மருத்துவ மையம் என்பன கடற்படையால் நிருவப்பட்டுள்ளன.

மேலும், வருடாந்த திருவிழாவிற்கு வருகை தந்த பிரமுகர்கள், இராஜதந்திரிகள், குருக்கள், அரச அதிகாரிகள், பக்தர்கள் மற்றும் ஏனைய சேவைகளை வழங்க வந்தவர்கள் மற்றும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் மற்றும் சேவைக்குத் தேவையான பல்வேறு பொருட்கள் மற்றும் உபகரணங்களும் பாதுகாப்பாக கொண்டு செல்ல காங்கசந்துறை மற்றும் குறிகாட்டுவான் இருந்து கச்சத்தீவு வரை கடல் மார்க்கமாக போக்குவரத்துக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் கடற்படையின் முழு கண்காணிப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்டது.

இச்சேவையை வெற்றிகரமாக முன்னெடுப்பதில் இலங்கை கடற்படையினர் பெரும் பங்காற்றிய அதேவேளை, கடற்படைத் தளபதியின் பணிப்புரையின் பேரில், கடற்பரப்பில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோதச் செயற்பாடுகளைத் தடுப்பதற்கு விசேட பாதுகாப்பு வேலைத்திட்டமொன்றை அமுல்படுத்த கடற்படையினர் விசேட வேலைத்திட்டமொன்றும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த பெருவிழாவுக்காக உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த பிரமுகர்கள், முன்னாள் கடற்படைத் தளபதியும் பாதுகாப்புப் படைத் தலைவருமான அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன (ஓய்வு), இலங்கை மற்றும் இந்திய பாதிரியார்களான பிரசாத்தீன், அரச அதிகாரிகள். , விசேட பிரமுகர்கள், உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள ஊடகவியலாளர்கள், இலங்கை கடற்படை கிறிஸ்தவ சங்கத்தின் அதிகாரிகள், முப்படைகள் மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகள் மற்றும் பெருந்திரளான இந்திய மற்றும் இலங்கை பக்தர்கள் கலந்துகொண்டனர்.

நன்றி - www.navy.lk