லெபனானில் ஐ.நா அமைதிகாக்கும் பணிக்கு 14 வது இலங்கைக் குழு புறப்பட்டது
மார்ச் 07, 2023லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் படை பணிக்காக உள்ள 14 வது இலங்கை குழு, இன்று வியாழக்கிழமை (02) அதிகாலை லெபனானுக்கு வாழ்த்துக்களுக்கு மத்தியில் புறப்பட்டது.
கட்டளை அதிகாரியான லெப்டினன் கேணல் டிபீஐடி களுஅக்கல மற்றும் இராண்டாம் கட்டளை அதிகாரியான மேஜர் டபிள்யூஎம்சிகே வன்னிநாயக்க ஆகியோரின் தலைமையில், 14 வது இலங்கைக் குழுவில் 10 அதிகாரிகள், 115 சிப்பாய்கள் உட்பட 125 பேருடன் வெடிபொருட்கள், போதைப்பொருள்,மற்றும் கண்ணிவெடிகளைக் கண்டறிவதில் நன்கு பயிற்சி பெற்ற நான்கு மோப்ப நாய்களும் (கோல்டன் ரெட்ரீவர்), 'டைகர்' (ஜெர்மன் ஷெப்பர்ட்) மற்றும் லீனா' (ஜெர்மன் ஷெப்பர்ட்) (Juerpi's Shepherd Dogs (GFrank Sheffer Dogs) உள்ளடங்குகின்றன.
இராணுவத் தளபதியின் சார்பாக வெளிநாட்டு நடவடிக்கைகள் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் அசங்க பெரேரா, மேலும் சில சிரேஷ்ட அதிகாரிகள், விமான நிலையத்தில் வாழ்த்துக்களைத் தெரிவித்து அவர்களை லெபனானுக்கு வழி அனுப்பினர்.
லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் படையின் தலைமையக நகோராவுக்கும் மற்றும் ஐ.நா அமைதிகாக்கும் படையின் தேவைக்கேற்ப விஷேட பிரமுகர்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் இலங்கை குழு பணியமர்த்தப்படுவர். 13 வது இலங்கை குழுவின் முதல் கட்டத்தினர் புதன்கிழமை (1) நாடு திரும்பின.
நன்றி - www.army.lk