இலங்கை விமானப்படை மற்றும் கடற்படை அதிகாரிகளுக்கு அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகளினால் தமது அறிவினை பரிமாறிக் கொள்வதற்கான துறைசார் செயலமர்வு

மார்ச் 07, 2023

இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் மற்றும் விமானப்படை தலைமையகத்தில் உள்ள பயிற்சி பிரிவு ஆகியவற்றின் ஒருங்கிணைப்புடன் ‘மனித உரிமைகள் நடமாடும் பயிற்சிக் குழு (MTT) மற்றும் கடல்சார் சட்ட நிறுவன திறன் உருவாக்கம் (ICB) தொடர்பான விசேட பயிற்சித் திட்டம் அண்மையில் இலங்கை விமானப்படையின் சீனக்குடா கல்லூரியில் நடத்தப்பட்டது.

சர்வதேச சட்ட ஆய்வுகளுக்கான பாதுகாப்பு நிறுவனத்தின் வளவளர்களான லெப்டினன்ட் கமாண்டர் ஸ்டீவன் பிரியன்ட், லெப்டினன்ட் கொமாண்டர் பிலிப் ப்ரூடர் மற்றும் லெப்டினன்ட் சக் பால் ஆகியோர் அடங்கிய குழுவினரால் இந்த இரண்டு நாள் செயலமர்வு நடத்தப்பட்டது.

இதன்போது சிவில் சக்தி மற்றும் கடல்சார் சட்ட அமலாக்க உதவிகளில் ஈடுபடும் இலங்கை விமானப்படை மற்றும் கடற்படை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

மனித உரிமைகள், சித்திரவதைக்கு எதிரான உரிமைகள், மனிதாபிமானமற்ற அல்லது இழிவான நடத்தை, பாலின வன்முறை மற்றும் கடத்தல், பாலியல் துன்புறுத்தல் மற்றும் தாக்குதல், சட்ட அமலாக்கத்தில் பலத்தை பயன்படுத்துதல், சர்வதேசரீதியிலான பல முக்கிய அம்சங்களை பரிமாறிக் கொள்வதற்கான ஒரு தனித்துவமான தளத்தை இச் செயலமர்வு வழங்கியது.

விமானப்படையின் சார்பாக இலக்கம் 3 கடல்சார் படைப்பிரிவின் கட்டளை அதிகாரி, குரூப் கெப்டன் சந்தன ரத்நாயக்க அவர்கள் இச் செயலமர்வை ஒருங்கிணைத்து வழங்கினார்,

இச் செயலமர்வை வெற்றிகரமாக முடித்ததைக் குறிக்கும் வகையில் செயலமர்வின் முடிவில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டது.