நெதர்லாந்து தூதுவர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரை சந்தித்தார்

மார்ச் 07, 2023

இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் அதிமேதகு பொனி ஹோர்பக் அவர்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. பிரேமித பண்டார தென்னகோன் அவர்களை கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (மார்ச் 07) சந்தித்தார்.

இச்சந்திப்பின் போது பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மற்றும் நெதர்லாந்து தூதுவருக்கிடையில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து சுமுகமான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இலங்கையில் அனர்த்த முகாமைத்துவ செயற்பாடுகள் மேம்படுத்துத்தல் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.