முப்படைகளின் அணிநடை பயிற்சிவிற்பாளர்கள் இராணுவத் தளபதியின் பாராட்டுகளைப் பெறுகின்றனர்

மார்ச் 09, 2023

அண்மையில் தேசிய மாணவர் படையணியின் ஜனாதிபதி மற்றும் படையணி வர்ணம் வழங்கும் விழாவின் போது சிறந்த பங்களிப்பை வழங்கிய பயிற்சி பயிற்றுவிப்பாளர்களின் (ஆணையற்ற அதிகாரிகள்) சேவைகளை பாராட்டி இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் நேற்று (மார்ச் 08) இராணுவத் தலைமையகத்தில் அவர்களுக்கான பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.

சான்றிதழைப் பெற்றவர்களில், இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையைச் சேர்ந்த 15 மூத்த ஆணையிடப்படாத அதிகாரிகள் மற்றும் இராணுவத்தில் முதல் நாள் முதல் களங்கமற்ற சேவைப் பதிவை பேணி வரும் 22 வது காலாட் படைப்பிரிவின் 01 இராணுவ சாரதியும் இச் சந்தர்ப்பத்தில் சான்றிதழ் வழங்கி பாராட்டப்பட்டதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க, தேசிய மாணவர் படைப்பிரிவின் பணிப்பாளர் பிரிகேடியர் சுதந்த பொன்சேகா மற்றும் ஆளனி நிர்வாக பணியகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் உபுல் கொடித்துவக்கு ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.