மேற்கு பாதுகாப்பு படையினர் மருத்துவமனைகளில் அத்தியாவசிய சுகாதார சேவைகளுக்கு உதவி

மார்ச் 10, 2023

மருத்துவமனை அதிகாரிகளால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க, மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 14 மற்றும் 61 வது காலாட் படைபிரிவுகளின் படையினர் புதன்கிழமை (8) அத்தியாவசிய சுகாதார சேவைகளைப் சீராக பேணுவதற்கு அவசர உதவிகளை வழங்கினர்.

மேற்குப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியின் வழிகாட்டுதலின்படி, 14 மற்றும் 61 வது காலாட் படைப்பிரிவுகளின் தளபதிகள் இருவரும் தங்கள் பிரிகேட் தளபதிகளுடன் ஒருங்கிணைந்து தொழில் சங்க நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட மருத்துவமனைகளுக்கு படையினர்களை அனுப்பி ஒத்துழைப்பு வழங்கினர்.

142 வது பிரிகேடின் 14 வது விஜயபாகு காலாட் படையணி, 143 வது காலாட் பிரிகேடின் 1 வது இலங்கை தேசிய காவலர் படையணி மற்றும் 14 வது காலாட் படைபிரிவின் 2 வது (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையணி ஆகியவை கொழும்பு தேசிய வைத்தியசாலை, குருநாகல் போதனா வைத்தியசாலை மற்றும் முல்லேரியாவ மனநல வைத்தியசாலைகளில் தங்களின் உதவிகளை உடனடியாக வழங்கினர்.

அதே நேரத்தில், 61 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்தின் 611 வது பிரிகேடின் 8 வது கெமுனு ஹேவா படையணியின் படையினர் முறையே பலாங்கொடை ஆதார வைத்தியசாலை, ஏஹலியகொட ஆதார வைத்தியசாலை மற்றும் கல்தோட்டை வைத்தியசாலையில் அத்தியாவசிய கடமைகளை ஈடுசெய்வதற்காக உடனடியாக அனுப்பப்பட்டனர்.

இந்த அவசரகால சூழ்நிலையில் இராணுவத்தின் ஈடுபாட்டை அந்தப் படையலகுகளின் கட்டளை அதிகாரிகள் உன்னிப்பாகக் கண்காணித்தனர்.

நன்றி - www.army.lk