இராணுவத்தினரால் வடமராட்சி மாணவர்கள் மற்றும் கிராம வாசிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டம்

மார்ச் 13, 2023

வடமராட்சி கிழக்கு அலியாவளை தமிழ் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்கள் மற்றும் கிராம மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியை வழங்கும் நீர் சுத்திகரிப்பு நிலையத்தை இலங்கை இராணுவம் (SLA) அண்மையில் நிறுவியது.

ஐக்கிய அரபு இராஜ்சியத்தில் உள்ள இலங்கையர்களின் நிதியுதவியுடன் யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 55 வது காலாட் படைப்பிரிவின் 553 வது காலாட் பிரிகேட் படைப்பிரிவின் கீழ் பணியாற்றும் 12 வது (தொ) விஜயபாகு காலாட் காலாட்படை படைப்பிரிவின் துருப்புக்களின் நிபுணத்துவத்துடன் இந்த சுத்திகரிப்பு நிலையம் மேற்கொள்ளப்பட்டதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சுவர்ண போதொட்ட அவர்கள் ஐக்கிய அரபு இராஜ்சியத்தில் உள்ள இலங்கையார்களுடனான நெருக்கமான ஒருங்கிணைப்பின் ஊடாக தேவையுடைய மாணவர்கள் மற்றும் சமூகத்தின் தேவை நிலையை கருத்தில் கொண்டு இந்தத் திட்டத்தை முன்னெடுத்ததாக இராணுவ வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

இந்த திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் 55 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன குணரத்ன, இதற்கு அனுசரணை வழங்கிய ஐக்கிய அரபு இராஜ்சியத்தில் உள்ள இலங்கை சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் திரு ஜோர்ஜ் ஹெட்டியாராச்சி, அரச அதிகாரிகள் மற்றும் படையினர் கலந்துகொண்டனர்.