இலங்கை கடலோரப் பாதுகாப்பு படை மற்றும் கடற்படை அதிகாரிகளுக்கான பயிற்றுவிப்பாளர் பாடநெறி

மார்ச் 13, 2023

ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றவியல் அலுவலகத்துடன் இணைந்து இலங்கை கடலோரப் பாதுகாப்பு படை நடத்திய விஜயம் மேற்கொண்டு, தரித்திருந்து, தேடல் நடவடிக்கைகளை முன்னெடுத்து பறிமுதல் செய்யும் பயிற்றுவிப்பாளர்கள் பயிற்சி பாடநெறியில் பங்குபற்றிய குழுவிற்கான  சான்றிதழ்கள் அண்மையில் (மார்ச்10) வழங்கப்பட்டன.

போதைப்பொருள் மற்றும் குற்றத் தடுப்புக்கான ஐக்கிய நாடுகள் சபையின் உலகளாவிய கடல்சார் குற்றத் தடுப்பு திட்டத்திற்கமைய இந்தப் பயிற்சிநெறி வழங்கப்படுவதாக கடலோரப் பாதுகாப்பு படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை கடலோரக் காவல்படையை சேர்ந்த  இரண்டு அதிகாரிகள் மற்றும் இலங்கை கடற்படையைச் சேர்ந்த இரண்டு  அதிகாரிகளும் கடந்த மாதம் (பெப்ரவரி 20) ஆரம்பமான இந்த பாடநெறியில் கலந்துகொண்டனர்.

இந்த பாடநெறியானது விஜயம் மேற்கொண்டு, தரித்திருந்து, தேடல் நடவடிக்கைகளை முன்னெடுத்து பறிமுதல் செய்யும் பயிற்சியானது பயிற்றுவிப்பாளர் திறமைகள், மதிப்பீட்டு நடைமுறையின் அம்சங்களைப் பற்றிய ஆழமான அறிவு போன்ற தலைப்புகளை உள்ளடக்கியதாக நடத்தப்பட்டது.

அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்திற்கு அருகாமையில் இந்த பாடநெறியின் நடைமுறை பயிற்சிகளும் இடம்பெற்றதாக கடலோர பாதுகாப்பு படை மேலும் தெரிவித்துள்ளது.

கிரிந்தவில் உள்ள கடலோர பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் நடைபெற்ற நிறைவு விழாவில், இலங்கையின்  இந்தியப் பெருங்கடல் பிராந்திய குழுவின்  தலைமைப் பயிற்றுவிப்பாளர் ஸ்டூவர்ட் மெல்வில் மற்றும் இந்திய கடற்படையின் லெப்டினன்ட் கொமாண்டர் மிஹிர் குர்ஜன் ஆகியோர் இவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கி வைத்தனர்.