இலங்கை இராணுவ வீரர்களின் இரத்ததான நிகழ்வு

மார்ச் 14, 2023

கிழக்கு மற்றும் மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் சேவையாற்றும் 100 இற்கும் மேற்பட்ட இலங்கை இராணுவ வீரர்கள் அண்மையில் இரண்டு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் இரத்த தானம் செய்தனர்.

இந்த திட்டத்தின் போது 23வது காலாட் படைப்பிரிவு, 233வது காலாட் பிரிகேட் மற்றும் 6வது கஜபா படையணிகளைச் சேர்ந்த 80 இராணுவ வீரர்கள் தாமாக முன்வந்து இரத்த தானம் செய்தனர்.

அதேபோன்று 142வது காலாட் பிரிகேட் மற்றும் 7வது கெமுனு ஹேவா படையணியின் 25 க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் இரத்த தானம் வழங்க முன்வந்ததாக இலங்கை இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.