பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லூரியின்
மாணவர் அதிகாரிகள் பாதுகாப்பு அமைச்சுக்கு விஜயம்

மார்ச் 17, 2023

பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லூரியின் (DSCSC) மாணவர் அதிகாரிகள் இன்று (மார்ச் 17) ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டேயில் உள்ள பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் உள்ள பாதுகாப்பு அமைச்சுக்கு வருகை தந்தனர்.

இதன்போது பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் தினேஷ் நாணயக்கார மற்றும் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் ஆகியோருடன் இக் கல்லூரி மாணவர் அதிகாரிகள்  கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டனர்.