பருத்தித்துறை பொதுமக்களுடன் இணைந்து இலங்கை இராணுவத்தினறால் கடற்கரையை சுத்தப்படுத்தும் திட்டம் முன்னெடுப்பு

மார்ச் 21, 2023

யாழ்ப்பாண பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள இலங்கை இராணுவத்தினறால் அண்மையில் முனை, பருத்தித்துறை, சுப்பர்மடம் மற்றும் சாக்கோட்டை ஆகிய கரையோரப் பகுதிகளில் கடற்கரையை சுத்தப்படுத்தும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

551வது காலாட்படை படைப்பிரிவின் கீழ் உள்ள 4வது இலங்கை சிங்கப் படைப்பிரிவு மற்றும் 16 (V) இலங்கை இலகு காலாட் படைப்பிரிவின் இராணுவீரர்கள் மற்றும் 500க்கும் மேற்பட்ட பொதுமக்களும் இத்திட்டத்தில் இணைந்து கொண்டதாக இராணுவ ஊடகம் தெரிவித்துள்ளது.

இந்த திட்டத்தில் இலங்கை கடற்படை, பொலிஸ், பருத்தித்துறை பிரதேச செயலாளர் அலுவலகம், நகர சபை, கரையோர பாதுகாப்பு திணைக்களம் மற்றும் கரையோர வள முகாமைத்துவ திணைக்களம் ஆகியவை இராணுவத்தினருடன் இணைந்து கொண்டனர்.