தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் புதிய தளபதியாக மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத்யாப்பா கடமைகள் பொறுப்பேற்பு

மார்ச் 21, 2023

பிரதி இராணுவ பதவி நிலைப் பிரதானி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா அவர்கள், கொழும்பு 3 இல் அண்மையில் நிறுவப்பட்ட தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் இரண்டாம் தளபதியாக வியாழக்கிழமை (மார்ச்16) தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

புதிதாக நியமிக்கப்பட்ட தளபதி, மத ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் தனது புதிய பதவியை ஏற்றுக்கொண்டதைக் குறிக்கும் வகையில், அதிகாரப்பூர்வ ஆவணத்தில் தனது கையொப்பத்தை இட்டார்.

மேஜர் ஜெனரல் (ஓய்வு) அமல் கருணாசேகர அவர்களுக்கு பதிலாக இப்பதவிக்கு மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவரது பதவியேற்பு நிகழ்வில் தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் பணிநிலை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.