இலங்கை பாதுகாப்பு அமைச்சின் புதிய இராணுவ இணைப்பு அதிகாரி தனது கடமைகளை பொறுப்பேற்பு

மார்ச் 21, 2023

பாதுகாப்பு அமைச்சின் புதிய இராணுவ இணைப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள பிரிகேடியர் தம்மிக்க வெலகெதர ஆர்எஸ்பி யுஎஸ்பி பிஎஸ்சி ஐஜி அவர்கள் தனது கடமைகளை இன்று (மார்ச் 21) பொறுப்பேற்றுக்கொண்டார்.

பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரியாக இதுவரை காலம் சேவையாற்றிய மேஜர் ஜெனரல் தினேஷ் நாணயக்கார அவர்கள் இடமாற்றம் பெற்றுச்சென்றதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு துணை பாதுகாப்பு இணைப்பு அதிகாரியாக சேவையாற்றிய பிரிகேடியர் வெலகெதர நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரிகேடியர் வெலகெதர அவர்கள் 33 வருடங்களுக்கும் மேலாக தாய் நாட்டிற்காக சேவையாற்றிவருவதுடன் இலங்கை இராணுவத்தில் பல்வேறு உயர் பதவிகளில் பணியாற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரியாக சேவையாற்றிய மேஜர் ஜெனரல் தினேஷ் நாணயக்கார அவர்கள் இலங்கை இராணுவத்தின் புதிய கடமையை பொருப்பேற்பதற்கு முன்னர் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன அவர்களினால் நேற்று மாலை பிரியாவிடை வழங்கப்பட்டது.

இடமாற்றம் பெற்றுச்செல்லும் மேஜர் ஜெனரல் தினேஷ் நாணயக்கார அவர்களின் சேவைகளைப் பாராட்டிய பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன அவரது எதிர்கால நடவடிக்கைகள் சிறப்பாக அமையவும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

மேற்படி பிரியாவிடை நிகழ்வைக் குறிக்கும் வகையில் மேஜர் ஜெனரல் தினேஷ் நாணயக்கார அவர்களுக்கு பாதுகாப்புச் செயலாளரினால் நினைவுப் பரிசும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

இலங்கை பாதுகாப்பு அமைச்சின் புதிய இராணுவ இணைப்பு அதிகாரி தனது கடமைகளை பொறுப்பேற்பு

             

 

பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரியாக சேவையாற்றிய மேஜர் ஜெனரல் தினேஷ் நாணயக்கார அவர்கள் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன அவர்களினால் பிரியாவிடை வழங்கப்பட்டது