இலங்கை விமானப்படையினரால் இரத்த தானம்

மார்ச் 22, 2023

கொழும்பு இலங்கை விமானப்படை தளத்தின் 63வது ஆண்டு நிறைவை முன்னிட்டு அண்மையில் இரத்ததான முகாம் ஒன்று நடத்தப்பட்டது.
 
மேற்படி இரத்த தான முகாம் ராகம, கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி பிரிவின் உதவியுடன் இடம்பெற்றதாக விமானப்படை ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
 
இதேவேளை கொழும்பு 8, பொரளையில் அமைந்துள்ள தண்ணியகம் தமிழ் வித்தியாலயத்தில் சமூக சேவைத் திட்டமும் விமானப்படையினரால் நடத்தப்பட்டது.