பாரதிபுரம் மாணவர்களுக்கு இலங்கை இராணுவத்தினரின் நிவாரண பொருட்கள் உதவி

மார்ச் 22, 2023

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் சிவில் இராணுவ ஒருங்கிணைப்பு திட்டத்திற்கு அமைவாக கிளிநொச்சி பாரதிபுரம் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 50 மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் அடங்கிய பரிசுப்பொதிகள் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வானது அத்தனகல்ல ரஜமஹா விகாரையின் பிரதமகுரு வணக்கத்துக்குரிய புகெந்தயாயே சந்தரதன தேரர் அனுசரணை வழங்கியதுடன் இராணுவத்தின் 9வது விஜயபாகு காலாட் படைப்பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டது.

முல்லைத்தீவு பாதுகாப்பு படைகளின் தளபதி ஜெனரல் தர்ஷன விஜேசேகர உட்பட சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் ஏனைய இராணுவ வீரர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.