இலங்கை ஐ.நா. அமைதி காக்கும் படையணியின் மாலி படைக்குழுவின் மேலதீக படையினருக்கு நம்பிக்கையினை வழுப்படுத்தும் ஐ.நா முன்பணி குழு
மார்ச் 23, 2023தற்போது இலங்கை வந்துள்ள ஐ.நா மதிப்பீடு மற்றும் ஆலோசனைக் உயர்மட்ட குழு போர் போக்குவரத்து உபகரணங்களின் தொழில்நுட்ப தரம் மற்றும் தரத்தினை உறுதி செய்வதற்கும் விரைவில் பணியமற்றுவதற்காக உருவாக்கப்பட்டுளள் போர் போக்குவரத்து பீ-1 குழுவின் செயற்பாட்டு தயர் நிலையினை மதிப்பீடு செய்தவற்கும் எதிர்பார்க்கப்படுகிறது. குறித்த குழு செவ்வாய்கிழமை ஸ்ரீ ஜயவர்தனபுர இராணுவத் தலைமையகத்தில் சந்தித்தது.
ஐ.நா தூதுக்குழுவில் திரு. ஜேம்ஸ் விக்டர் டி ரோகோல், கேணல் லாரன்ஸ் கபினா, லெப்டினன் கேணல் ராஜீவ், திரு. மார்க் ப்ளூட் மற்றும் திரு. சத்விந்தர் சிங் போல் ஆகியோர் அடங்குவர். மேலும் அவர்கள் சுய-நிலைக் கருவிகள், போர் வாகனங்கள் மற்றும் பாகங்கள், கண்ணி வெடி அகற்றும் சாதனங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளனர். வெடிக்கும் ஆயுதங்கள், வழங்கல் மற்றும் மருத்துவ உபகரணங்கள், இராணுவ வன்பொருள், படையணி பொருட்கள் மற்றும் கண்காட்சி ஆர்ப்பாட்டங்களை ஆவர்களின் விஜயத்தின் போது (20-25 மார்ச்) பார்வையிட்டனர். இக் காட்சிபடுத்தல்கள் 1 வது இராணுவ போர்கருவிகள் படையணி, இலங்கை இராணுவ பொறியியல் படையணி, எம்பிலிபிட்டிய இராணுவ பொறியியல் படையணி பயிற்சி பாடசாலை, உடவலவை இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் வேலைத்தளம் மற்றும் இலங்கை அமைதிகாக்கும செயற்பாட்டு பயிற்சி நிலையம் ஆகியவற்றில் இடம்பெறும்.
இந்த செயன்முறையானது தொழில்நுட்ப முன்பணியிடல் வருகை என ஐ.நா அமைதிகாக்கும் பணிக்கு அனுப்புவதற்கு இராணுவத்தால் தொடர்ச்சியாக பின்பற்றபடுகின்றது. இந்த முன்பணியிடல் வருகையின் நோக்கம் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் திணைக்களத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, குழுவின் பொருட்கள் மற்றும் உபகரணங்களை ஆய்வு செய்து அதன் நிபந்தனைகளை சரிபார்ப்பதாகும்.
உத்தேச மேலதீக போர் போக்குவரத்து பி-1 குழுவானது 20 அதிகாரிகள் மற்றும் 223 சிப்பாய்களைக் கொண்டுள்ளது. நாட்டின் தேசிய பொருளாதாரத்திற்கு ஆண்டுதோறும் 9 மில்லியன் டொலர்களை கொண்டுவர எதிர்பார்க்கிறது. தற்போது போர் போக்குவரத்து குழுவில் 20 அதிகாரிகள் மற்றும் 223 சிப்பாய்கள் மினுஸ்மாவில் பணியாற்றி வருகின்றனர்.
மாலிக்கான மேலதீக இலங்கை அமைதி காக்கும் குழுவிற்கான ஐ.நா.வின் கோரிக்கையானது, இலங்கையின் ஆயுதப் படைகளின் தொழில்முறை தரங்களுக்கு அதன் நம்பிக்கை மற்றும் அங்கீகாரத்தின் தெளிவான மறு-ஒப்புதலைப் பிரதிபலிப்பதோடு, தற்போது மாலியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள போர் போக்குவரத்து குழு பாராட்டுக்குரிய வகையில் செயல்படுகிறது.
தளபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சுமூகமான சந்திப்பின் போது, இராணுவத் தளபதி இந்த மேலதிக போர் போக்குவரத்து பி-1 குழு ஐ.நா அமைதி காக்கும் பணிக்கு குறுகிய அறிவிப்பில் அனுப்புவதற்கா இலங்கை இராணுவத்தின் தயார்நிலை குறித்து ஐ.நா பிரதிநிதிகளுக்கு விளக்கினார்.
இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல்களின் நிறைவில், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் வருகை தந்த ஐ.நா பிரதிநிதிகளுக்கு பாராட்டுச் சின்னமாக விசேட நினைவுச் சின்னங்களை வழங்கினார்.
மேற்கூறிய இலங்கை இராணுவ அமைப்புகளுக்கான அவர்களின் விஜயங்களின் போது, 25 மார்ச் 2023 அன்று அவர்கள் புறப்படுவதற்கு முன்னர் ஐ.நா பிரதிநிதிகளை பார்வையிட வருபவர்கள், மாலிக்கு புறப்படுவதற்கு ஒதுக்கப்பட்டுள்ள அந்தந்த அதிகாரிகளிடமிருந்து உபகரணங்கள், பிற துணைக்கருவிகள் மற்றும் அவற்றின் செயல்பாடுகள் பற்றிய விரிவான விளக்கத்தினை பெறுவார்கள்.
நீண்ட கால ஸ்திரத்தன்மை மற்றும் அமைதியை மையமாகக் கொண்டு, மத்திய ஆப்பிரிக்க குடியரசு, காங்கோ ஜனநாயக குடியரசு, மாலி மற்றும் தென் சூடான் போன்ற வேகமாக மாறிவரும், கணிக்க முடியாத மற்றும் அதிக தேவையுள்ள சூழல்களில் ஐக்கிய நாடுகளின் பல பரிமாண அமைதி காக்கும் நடவடிக்கைகள் பயன்படுத்தப்படுகின்றன. குடிமக்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகின்றது.
கிடல், அகுவெல்ஹோக் மற்றும் டெஸ்ஸாலிட் பிராந்தியங்களில் அமைந்துள்ள அமைதி காக்கும் தளங்களுக்கு போக்குவரத்து நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ஒரே ஒரு குழுவாக சிறந்த அர்ப்பணிப்புடனும் தமது கடமைகளை ஆற்றிவரும் இலங்கை போர் போக்குவரத்து குழு உயிருக்கு ஆபத்தான இடர்களுக்கு மத்தியிலும் கடினமான சூழ்நிலையில் வழங்கல் வாகனத் தொடரணிகளுக்கு பாதுகாப்பை வழங்குவதில் ஈடுபட்டுள்ளது.
நன்றி - www.army.lk