இராணுவத்தின் முதலாவது மகளிர் கண்ணிவெடி அகற்றும் படையினருக்கான சின்னங்கள் அணிவிப்பு

மார்ச் 23, 2023

இலங்கை இராணுவத்தின் முதல் தொகுதி மகளிர் கண்ணிவெடி அகற்றும் படையணியின் சின்னம் அணிவிப்பு நிகழ்வு கோட்டே ஸ்ரீ ஜெயவர்தனபுரேவில் உள்ள இராணுவ தலைமையகத்தில் நடைபெற்றது.

இதன்போது சர்வதேச அளவில் புகழ்பெற்ற மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பாடநெறியினை நிறைவு செய்த இராணுவத்தின் முதல் மகளிர் படையினர் நேற்று (22 மார்ச்) இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களிடமிருந்து சின்னங்களை பெற்றுகொண்டனர் என இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

2021 டிசம்பரில் மகளிர் சிப்பாய்களுக்கான கண்ணிவெடி அகற்றும் பயிற்சியை 3 பெண் அதிகாரிகள் மற்றும் 51 பெண் சிப்பாய்கள் கொண்ட குழு இரண்டு பிரிவுகளின் கீழ் பூஓயாவில் உள்ள பொறியியல் பிரிகேட் தலைமையகம் மற்றும் யாழ்ப்பாணம் மைலட்டியில் உள்ள 10 வது களப் பொறியியல் படையணி தலைமையகம் ஆகிய இரண்டிலும் அவர்களுக்கான பயிற்ச்சிகளை பெற்றுக்கொண்டனர்.

கண்ணிவெடி அகற்றும் பெண்களுக்கான கண்ணிவெடி அகற்றும் பாடநெறியை நிறைவு செய்த மூன்று பெண் அதிகாரிகள் மற்றும் 51 பெண் சிப்பாய்கள் தற்போது கண்ணிவெடி அகற்றும் பணியை யாழ்ப்பாணம் மயிலட்டியில் மேற்கொள்ளும் ஆண் சிப்பாய்களுடன் இணைந்து எதிர்கால ஐநா அமைதிகாக்கும் பணிகளுக்கான அனுபவங்கள் மற்றும் அறிவுடன் கண்ணிவெடிகளை அகற்ற பணிபுரிகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்போது இலங்கை இராணுவ மகளிர் படையணியின் படைத்தளபதியும் முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையக தளபதியுமான மேஜர் ஜெனரல் யு.டி விஜேசேகர ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ ஆர்சீடிஎஸ்பீஎஸ்சீ, இலங்கை தலைமை களப் பொறியியாலரும் இலங்கை இராணுவ பொறியியல் படையணி படைத்தளபதி மேஜர் ஜெனரல் எம்.கே.ஜெயவர்தன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டியு மற்றும் இராணுவ பொறியியல் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஏ.எச்.எல்.ஜி அமரபால ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டிசீபீஎஸ்சி ஆகியோர் பாடநெறியை நிறைவு செய்த பெண் படையினர்களுக்கு சின்னங்களை அணிவித்தனர்.