தேசிய பாதுகாப்பு கல்லூரியில் சுற்றாடல் மற்றும் அதன் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பான விரிவுரை
மார்ச் 24, 2023பேராசிரியர் சரத் கொட்டகம அவர்களினால் தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் கற்கை நெறிகளில் பங்கேற்பாளர்களுக்கான விருந்தினர் விரிவுரை அண்மையில் (மார்ச் 22) கொழும்பு 03, காலி வீதியிலுள்ள கல்லூரி வளாகத்தில் நிகழ்த்தப்பட்டது.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் விலங்கியல் மற்றும் சுற்றாடல் விஞ்ஞானப் பிரிவின் பேராசிரியர் கொட்டகம, இயற்கை மற்றும் வனவிலங்குகள் தொடர்பான பல வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்தி அரசாங்கத்தின் கொள்கை திட்டமிடலுக்கு அளப்பரிய பங்களிப்பை வழங்கியுள்ளார்.
இதன்போது சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் இலங்கையின் எதிர்காலம் பற்றிய அறிவைப் பகிர்ந்து கொண்டார், பாடநெறி பங்கேற்பாளர்களின் நலனுக்காக கலந்துரையாடலுக்கு முன்னதாக பயனுள்ள செலமர்வும் நடத்தப்பட்டது என தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் வட்டாரங்கள் தெரிவித்தன.
‘தேசிய பாதுகாப்பு மற்றும் மூலோபாய கற்கைகள் பாடநெறியின்’ பாடத்திட்டத்தின்படி விருந்தினர் விரிவுரையாளர் அழைக்கப்பட்டதாகவும், இந்த நிகழ்வு ‘டினர்ஸ் கிளப்’ நிகழ்வாக நடைபெற்றதாகவும் தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
பாதுகாப்பு கல்லூரிக்கு வருகை தந்த பேராசிரியரை கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா அவர்கள் அன்புடன் வரவேற்றார்.
இந்த விரிவுரையையடுத்து பேராசிரியர் கொட்டகம அவர்களுக்கு தேசிய பாதுகாப்பு கல்லூரி கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா அவர்களினால் நினைவுச் சின்னம் ஒன்று வழங்கி வைக்கப்பட்டது.