பாதுகாப்பு சேவைகளின் மோட்டார் சைக்கிள்
சாம்பியன்ஷிப் போட்டி - 2023 வெலிசரயில்

மார்ச் 24, 2023

இலங்கை கடற்படையால் ஏற்பாடு செய்திருந்த 12வது பாதுகாப்பு சேவைகளின் மோட்டார் சைக்கிள் சாம்பியன்ஷிப் போட்டி - 2023 எனும் விருவிருப்பான மோட்டார் சைக்கிள் போட்டி அண்மையில் வெலிசரயில் உள்ள கொழும்பு சுப்பர் கிராஸ் ஓடுதளத்தில் நடைபெற்றது.

முப்படையைச் சேர்ந்த 18 மோட்டர் சைக்கிள் ஓட்ட வீரர்கள் போட்டியிட்ட இந்த சாம்பியன்ஷிப் போட்டியின் பிரதம அதிதியாக இலங்கை விமானப்படையின் நடவடிக்கைப் பிரிவு பணிப்பாளர் நாயகம் எயார் வைஸ் மார்ஷல் வருண குணவர்தன கலந்து கொண்டார்.

மேற்படி மோட்டார் பந்தய சாம்பியன்ஷிப் - 2023 யை இலங்கை இராணுவத்தின் மோட்டார் சைக்கிள் பந்தய வீரர்கள் வென்றனர். அத்துடன் இலங்கை விமானப்படையினர் இரண்டாம் இடத்தையும் சுவீகரித்துக்கொண்டதாக இராணுவ  ஊடக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிகழ்வில் முப்படைகளின் உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.