இலங்கை சிவில் பாதுகாப்புத் திணைக்கள பணியாளர்களின் சேவைகளை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ஆகியோர் பாராட்டினர்

மார்ச் 24, 2023

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் அவர்கள் இன்று (மார்ச் 24) மொரட்டுவ கட்டுபெத்தவில் உள்ள சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைமையகத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.
 
இதன்போது, தாய் நாட்டிற்காக சிவில் பாதுகாப்புத் திணைக்கள பணியாளர்கள் ஆற்றிய அர்ப்பணிப்புடனான சேவைகளுக்காக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் நன்றி தெரிவித்தார்.
 
மேற்படி விஜயத்தின் போது தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க அவர்களும் கலந்து கொண்டார்.
 
இரண்டு உயர் பாதுகாப்பு அதிகாரிகளும் தங்கள் விஜயத்தின் போது தாய்நாட்டிற்கு சிவில் பாதுகாப்புத் திணைக்களம் ஆற்றிய சேவைகளை மிகவும் பாராட்டினர்.
 
சிவில் பாதுகாப்புத் திணைக்கள தலைமையக வளாகத்திற்கு வருகை தந்த உயர் அதிகாரிகள் சிவில் பாதுகாப்புத் திணைக்கள பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ரஞ்சன் லமாஹேவகே (ஓய்வு) அவர்களினால் வரவேற்கப்பட்டதை தொடர்ந்து சிவில் பாதுகாப்புத் திணைக்கள தலைமையகத்தில் பணியாற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுடன் சுமூகமான கலந்துரையாடல் இடம்பெற்றது.
 
இந்த விஜயத்தை நினைவுகூரும் வகையில், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மற்றும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி ஆகியோருக்கு மேஜர் ஜெனரல் லமாஹேவகே அவர்களினால் நினைவுச் சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
 
இந்நிகழ்வில் சிவில் பாதுகாப்புத் திணைக்கள சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதன் பணியாளர்களும் கலந்து கொண்டனர்.