ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் ஜெர்மனியின் ப்ரெமன் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து

மார்ச் 27, 2023

ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் மற்றும் ஜெர்மனியின் ப்ரெமன் பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு இடையே கல்வி ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடப்பட்டது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தமானது ஏற்கனவே 2017 இல் கைச்சாத்திடப்பட்துள்ளதுடன் அது கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ், மற்றும் ப்ரெமன் பல்கலைக்கழகத்தின் மூத்த பேராசிரியரும் விஞ்ஞானியுமான டாக்டர் இங் அன்றியஸ் கொன்ச்கென் ஆகியோரால் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது என பாதுகாப்பு பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன.