ஆயுதப் படையினர்; தேசத்தை கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு முழுமையான பங்களிப்புக்களை வழங்க வேண்டும் - பாதுகாப்புச் செயலாளர்
டிசம்பர் 11, 2020- தமது இராணுவம் உயர் தரத்தை நோக்கி பயணிப்பதை நாடு எதிர்பார்கின்றது.
- இயங்கை அனர்த்தம் அதனால் ஏற்படும் உயிர் ஆபத்துகளே தற்போதைய அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.
மூன்று தசாப்தங்களாகக் காணப்பட்ட பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்ட இந்த நாட்டை மீளக்கட்டியெழுப்பும் வகையில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் தேசத்தை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்திற்கு முழுமையான பங்களிப்புக்களை பாதுகாப்புப் படையினர் வழங்க வேண்டும் என்று பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரட்ன தெரிவித்தார்.
இந்த நாட்டில் மூன்று தசாப்தங்களாக காணப்பட்ட மிலேச்சதனமான பயங்கரவாதத்திற்கு எதிராக மிக நீண்ட காலமாக இடம்பெற்ற யுத்தத்தில் பயங்கரவாதத்தை எதிரத்து போராடுவதில் தோல்வி மற்றும் வெற்றிகளைக் கண்டதாக தெரிவித்த பாதுகாப்புச் செயலாளர், அதிகாரி ஒருவருக்கு அறிவு மற்றும் துறைசார் நிபுணத்துவம் முதன்மையானதாக கருதப்படுகின்றது. எனவே, உயர் தகுதி, திறமை மற்றும் துறைசார் தகுதியுடைய இராணுவ அதிகாரி சவால்களை எதிர்கொள்ளும் வகையில் எதிர்காலத்தை நோக்கி எமது படைகளை வழிநடத்த வேண்டும் என்றார்.
உலகமயமாக்கல், தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் ஏனைய கண்டுபிடிப்புக்கள் தொடர்பில் உலகில் காணப்படும் பரிணாம வளர்ச்சி தொடர்பாக உரையாற்றிய பாதுகாப்புச் செயலாளர், இராஜதந்திரம், தகவல், இராணுவம் மற்றும் பொருளாதாரம் ஆகிய துறைகளில் முன்னேற்றமடைய நாடுகள் முயற்சித்து வருவதாகவும், இதற்கமைய இலங்கையும் இவற்றை அடையக்கூடிய முடியுமான வழிமுறைகளை தரங்களை அடைய பாதுகாப்பு படையினரின் பங்களிப்பு அவசியமானதாகும் என்றார்.
இராணுவத் தலைவர்கள் சகல துறைகளிலும் செயற்படுபவர்கள் என எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவித்த அவர், தற்பொழுது காணப்படும் அனேகமான அச்சுறுத்தல்கள் பெரும்பாலும் இயற்கை அனர்த்தங்களாகவே மனித வாழ்விற்கு ஆபத்துக்களை ஏற்படுத்தும் அனர்த்தகளாகவே காணப்படுகின்றன. மனிதனால் உருவாக்கப்படும் அனர்த்தமாக இருந்தாலும் சரி, இயற்கை அனர்த்தமாக இருந்தாலும் சரி எந்தவொரு அனர்த்தங்களின் போதும் தமது மக்களின் பாதுகாப்பிற்குத் தேவையான தலைமைத்துவத்தை அதிகாரிகள் வழங்க வேண்டும் என்பதே அரசாங்கத்திக் எதிர்பார்ப்பாகும்.
மக்களை பாதுகாப்பதற்காக அர்ப்பணிப்பான சேவையை வழங்கும் ஒரு சந்தர்ப்பமாக கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கும் நடவடிக்கையை தான் கருதுவதாக தெரிவித்த மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன, கொரோனா பாதிப்பிலிருந்து மக்களை மீட்டெடுக்கும் பொருட்டு எமது பாதுகாப்பு படையினர், பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படையினருடன் இணைந்து சிறந்த சேவையை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர் என்றார்.
பாதுகாப்பு சேவைகள், கட்டளை மற்றும் பதவிநிலை அதிகாரிகள் கல்லூரியில் கற்கைகளை முடித்துக் கொண்ட அதிகாரிகளின் பட்டமளிப்பு வைபவம் கொழும்பிலுள்ள தாமரைத் தடாகம் மஹிந்த ராஜபக்ஷ திரையரங்கில் இன்று (டிசம்பர் 10) நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே பாதுகாப்புச் செயலாளர் மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்தார்.
சம்பிரதாய முறைப்படி மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான இந்த நிகழ்வில் உயிர் நீத்த படைவீரர்களை நினைவு கூர்ந்து ஒரு நிமிட மௌன அஞ்சலி அனுஷ்டிக்கப்பட்டது.
கற்கை நெறியை வெற்றிகரமாக முடித்துக் கொண்ட அதிகாரிகள் பிரதம அதிதியிடமிருந்து விருதுகளை பெற்றுக் கொண்டதுடன், பாதுகாப்பு சேவைகள், கட்டளை மற்றும் பதவிநிலை அதிகாரிகள் கல்லூரியினால் வருடாந்தம் வெளியிடப்படும் ‘த அவ்லெட்’ என்ற சஞ்சிகையும் வெளியிட்டு வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வின் போது தமது கற்கைகளை வெற்றிகரமாக முடித்துக் கொண்ட இலங்கையின் முப்படைகளைச் சேர்ந்த 132 இளம் அதிகாரிகளும் 11 நட்பு நாடுகளைச் சேர்ந்த 18 வெளிநாட்டு அதிகாரிகளும் இங்கு தமது பட்டங்களை பெற்றுக் கொண்டனர்.
பங்களாதேஷ், சீனா, இந்தியா, இந்தோனேசியா, மாலைத்தீவு, நேபாளம், ஓமான், பாகிஸ்தான் ருவாண்டா, சவுதி அரேபியா மற்றும் சூடான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு மாணவ அதிகாரிகளே இம்முறை பட்டம் பெற்றுக் கொண்டனர்.
சிறந்த ஆய்வுக் கட்டுரையை சமர்பித்தமைக்காக மேற்படி பாதுகாப்பு கல்லூரியினால் வழங்கப்படும் ‘கோல்டன் பென்’ என்ற சிறப்பு விருதியை மேஜர் பிஜிஎன்ஐ கருணாதிலக்க பிரதம அதிதியான மேஜர் ஜெனரல் கமல் குணரட்விடமிருந்து பெற்றுக் கொண்டார்.
பாதுகாப்புச் செயலாளர் இங்கு மேலும் உரையாற்றுகையில் :- இராணுவப் பயிற்சியானது எந்தவொரு தரத்திற்கும் பொதுவானதாக அமைந்திருக்க வேண்டும். ஜெனரல், அட்மிரல் மற்றும் எயார் மார்ஷல் என்ற எந்தவொரு உயர் தரத்தையும் பொறுப்பேற்றுக் கொள்ளும் அளவுக்கு பயிற்சிகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும். இதற்கான தகுதிகளை ஒரே இரவில் பெற்றுக் கொள்ள முடியாது மாராக அறிவு, ஆற்றல் அர்ப்பணிப்பு மற்றும் அனுபவம் போன்றவை அவசியமாகும் என்றார்.
பாதுகாப்பு சேவைகள், கட்டளை மற்றும் பதவிநிலை அதிகாரிகள் கல்லூரியானது கொதர்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்துடன் சர்வதேச உறவுகள், மூலோபாயம், முகாமைத்துவ கற்கை போன்றவற்றை உள்ளடக்கிய முதுமாணி பட்டத்தை வழங்கும் இலங்கையின் முன்னணி கலவி நிறுவனமாகும். அதிகாரி ஒருவர் தனது உயர் கல்வியுடன் தொழில்சார் விருத்தியையும் மேம்படுத்த இந்த கற்கையானது பயனுள்ளதாக அமைந்துள்ளது என்றார்.
இலங்கை மற்றும் நற்பு நாடுகளைச் சேர்ந்த இராணுவ தலைவர்களின் எதிர்கால முன்னேற்றத்தைக் கருதி அவர்களுக்குத் தேவையான உயர்தர கல்வி மற்றும் பயிற்சிகளை வழங்கும் கல்லூரியாகும்.
இந்த கல்லூரியின் தற்போதைய மற்றும் முன்னாள் கட்டளைத் தளபதிகள், பிரதம பயிற்றுவிப்பாளர் மற்றும் பணிப்பாளர் ஆகியோர் இந்த கல்லூரிக்காக ஆற்றிய சேவைகளை இக்கல்லூரியின் முன்னாள் அதிகாரி என்றவகையிலும் பாதுகாப்புச் செயலாளர் தனது உரையின் போது பாராட்டினார். எதிர்காலங்களிலும் அதிகாரிகள் இலக்குகளில் வெற்றிபெறவும் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் இது போன்ற செயற்பாடுகளை முன்னெடுத்த இதற்கான முயற்சிகளை மேற்கொண்ட பாதுகாப்பு சேவைகள், கட்டளை மற்றும் பதவிநிலை அதிகாரிகள் கல்லூரின் கட்டளை தளபதி மற்றும் பீடங்கள், ஊழியர்களுக்கும் கொதர்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் மற்றும் ஊழியர்களுக்கும் தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.
நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில்முயற்ச்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளர் திரு ஆர் எம் ஏ ரத்நாயக்க, பாதுகாப்பு அமைச்சின் சேவா வணிதா பிரிவு தலைவி திருமதி சித்ரானி குணரட்ன, பாதுகாப்பு படைகளின் பதில் பிரதம அதிகாரி, முப்படைகளின் தளபதிகள், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் உப வேந்தர், பாதுகாப்பு சேவைகள், கட்டளை மற்றும் பதவிநிலை அதிகாரிகள் கல்லூரியின் கட்டளை தளபதி, மேற்படி கல்லூரியின் முன்னாள் கட்டளை தளபதிகள், பாதுகாப்பு அமைச்சின் மேலதிகச் செயலாளர் பாதுகாப்பு, முகாமைத்துவ சபையின் உறுப்பினர்கள், முப்படைகளின் பிரதம அதிகாரிகள் இலங்கையிலுள்ள தூதரகங்களின் பாதுகாப்பு இணைப்பாளர்கள், ஆலோசகர்கள், உள்நாட்டு, வெளிநாட்டு மாணவ அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் பலரும் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.