ரியர் அட்மிரல் மெரில் சுதர்ஷன (ஓய்வு) சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் புதிய மேலதிக பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டார்

ஏப்ரல் 04, 2023

சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் (CSD) புதிய மேலதிக பணிப்பாளர் நாயகமாக ரியர் அட்மிரல் மெரில் சுதர்ஷன (ஓய்வு) நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் இன்று (ஏப்ரல் 04) பாதுகாப்பு அமைச்சில் வைத்து பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவிடமிருந்து தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வின் போது, பாதுகாப்புச் செயலாளர் ரியர் அட்மிரல் சுதர்ஷன அவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

அவர் வெளிச்செல்லும் மேலதிக பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் யுஐ சேரசிங்கவின் வெற்றிடத்தை நிரப்புவார்.

ரியர் அட்மிரல் மெரில் சுதர்சன இலங்கை கடற்படையில் 35 வருடங்களுக்கும் மேலாக சேவையாற்றிய ஒரு சிரேஷ்ட அதிகாரியாவார் என்பது குறிப்பிடத்தக்கது.