முப்படையின் அணிநடை பயிற்றுவிப்பாளர்கள்
இங்கிலாந்து நிபுணர்களுடன் அறிவைப் புதுப்பிப்பு

ஏப்ரல் 04, 2023

முப்படைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 48 அணிநடை பயிற்றுவிப்பாளர்கள் இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியில் மார்ச் 20 முதல் 30 வரை பத்து நாள் கொண்ட அடிப்படை அணிநடை பயிற்றுவிப்பாளர் புத்துணர்ச்சி பாடநெறி சமீபத்தில் ஐக்கிய இராச்சியத்தின் நிபுணர்களின் உதவியிடன் நடைபெற்றது.

இராணுவத்தின் 24 அணிநடை பயிற்றுவிப்பாளர்கள், கடற்படை 12 அணிநடை பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் விமானப்படை 12 அணிநடை பயிற்றுவிப்பாளர்கள் ஆகியவற்றின் நாற்பத்தெட்டு பயிற்சி பயிற்றுவிப்பாளர்களின் பங்கேற்புடன் அதன் ஆரம்ப உரையானது சீன-இலங்கை நட்புறவு கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இலங்கை மற்றும் மாலைத்தீவு குடியரசின் ஐக்கிய இராச்சியத்தின் பாதுகாப்பு இணைப்பாளர் கேணல் போல் கிளேய்டன், பாதுகாப்பு அமைச்சு மற்றும் இலங்கை இராணுவத்தின் பயிற்சி பணிப்பகம் ஆகியவற்றுடன் இணைந்து முப்படைகளின் பயிற்சி அறிவு தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது.

சான்றிதழ் வழங்கும் விழாவில் முப்படையில் பங்குபற்றிய அனைவருக்கும் நிகழ்ச்சியை வெற்றிகரமாக முடித்ததற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும், பிரதம அதிதியாக மேஜர் ஜெனரல் புத்திக பெரேரா அவர்கள் கலந்து கொண்டார். மேலும் சான்றிதழ்கள் மற்றும் விருதுகள் வழங்கப்படுவதற்கு முன்னர் நிறைவுரைகளை வழங்கிய இராணுவ கல்வியற் கல்லூரியின் தளபதி அவர்களால் பாராட்டுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

மேலும், இலங்கை இராணுவத்தின் சார்ஜென் ஆர்ஜிஎஸ்சிஆர்கே ரஸ்னெக்கெதர அவர்கள் இலங்கை கடற்படையின் ஜிஎஸ் இலங்கதிலக்க மற்றும் இலங்கை விமானப்படையின் சார்ஜென் பீஎச்டி மதுசங்க ஆகியோர் அணிநடைக் கோது வழங்கி பாராட்டப்பட்டனர்.

நன்றி :  www.army.lk