தேவையுடைய குடும்பத்திற்கு இராணுவத்தினரால் வீடொன்று நிர்மாணம்

டிசம்பர் 12, 2020

இலங்கை இராணுவம் சீகிரிய, கிம்பிஸ்ஸ பிரதேசத்தில் தேவையுடைய குடும்பம் ஒன்றுக்கு புதிதாக வீடொன்றை நிர்மாணித்துள்ளது.

தனது சமூக நலன்சார் திட்டத்தின் ஓர் அங்கமாக புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மேற்படி வீட்டை அதன் உரிமையாளருக்கு அண்மையில் கையளித்தது.

மேற்படி குடும்பத்தின் ஏழ்மை நிலைமை தொடர்பில் அயலவர்களும் குறித்த பிரதேசத்தின் கிராம சேவகரும் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவந்ததை அடுத்து இலங்கை இராணுவத்தின் 53ஆவது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் நிஷாந்த மானகேயின் வழிகாட்டலின் கீழ் மேற்படி புது வீடு நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

53ஆவது படைப் பிரிவின் வளங்களைப் பயன்படுத்தி நிர்மாணிக்கப்பட்ட மேற்படி புதிய வீடு உரிமையாளரிடம் வியாழக் கிழமை (10) கையளிக்கப்பட்டதுடன் சுகாதார வழிகாட்டல்களை பேணி எழிமையான முறையில் நடைபெற்ற இந்ம நிகழ்வில் வீட்டு உரிமையாளரின் குடும்ப உறவினர்கள், கிராமவாசிகள், அதிகாரிகள் மற்றும் வீரர்கள் கலந்து கொண்டனர்.

Tamil