பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவு தனது பணியாளர்களுக்கு உலர் உணவுப் பொதிகள் அன்பளிப்பு

ஏப்ரல் 11, 2023

பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவு தனது சிவில் பணியாளர்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கும் நிகழ்வு பாதுகாப்பு அமைச்சில் இன்று (ஏப்ரல் 11) இடம்பெற்றது.

பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சித்ராணி குணரத்ன முன்னிலையில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன அவர்கள் நிகழ்வில் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு உலர் உணவுப் பொதிகளை உத்தியோக பூர்வமாக வழங்கி வைத்தார்.

இதன்படி அமைச்சில் கடமையாற்றும் சாரதிகள், அலுவலக உதவியாளர்கள், துப்புரவுப் பணியாளர்கள் உட்பட 200க்கும் மேற்பட்ட சிவில் சிற்றூழியர்களுக்கு இந்த பண்டிகைக் காலத்திற்கான ஊக்குவிப்பாக பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், சேவா வனிதா பிரிவின் அதிகாரிகள் மற்றும் அமைச்சின் பணியாளர்களும் கலந்து கொண்டனர்.