மகஸ்தோட்டை மோட்டார் ஓட்டப் போட்டியில் இலங்கை இராணுவ வீரர்கள் பதக்கங்கள் பெற்றனர்

ஏப்ரல் 12, 2023

அண்மையில் நுவரெலியாவில் நடைபெற்ற மகஸ்தோட்டை மோட்டார் ஓட்டப் போட்டியில் இலங்கை இராணுவத்தை பிரதிநிதிப்படுத்திய மோட்டார் சைக்கிள் போட்டியாளர்கள் பல பதக்கங்களை வென்றெடுத்தனர்.

இராணுவ மோட்டார் விளையாட்டுக் குழுவின் போட்டியாளர்கள் போட்டிகளில் இராணுவ வீரர்கள் அதிக இடங்களைப் பிடித்துள்ளனர் என இலங்கை இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

எஸ்எம் - சுப்பர் மோட்டார்ட் 250/450 cc திறந்த போட்டியில் இலங்கை இராணுவப் பொலிஸின் கோப்ரல் BI மதுரங்க முதலாம் இடத்தைப் பெற்றதோடு, ஸ்போர்ட்ஸ் ட்டுவரிங் 600cc திறந்த நிகழ்வில் 3ஆம் இடத்தையும் வென்றார்.

அத்துடன் 125 சிசி முதல் 250 சிசி வரையிலான (ஸ்பீட் டிரெயில் பைக் ஓப்பன் போட்டியில்) இன்ஜினியர் சர்வீசஸ் பிரிவின் கோப்ரல் ஜேஎம்எஸ் ஜயலத் 3வது இடத்தையும், கஜபா ரெஜிமென்ட்டின் பிரைவேட் எல்பிடி செனவிரத்ன எஸ்எம் - சுப்பர் மோட்டார்ட் 250/450சிசி திறந்த போட்டியில் 3வது இடத்தையும் பிடித்தனர்.

மஹகஸ்தோட்டை மோட்டார் ஓட்டப் போட்டி இலங்கையில் நீண்ட காலமாக நடத்தப்படும் மோட்டார் விளையாட்டு நிகழ்வுகளில் ஒன்றாகும். இது நுவரெலியாவின் வருடாந்தம் ‘ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் கோடைகால களியாட்ட ’ நிகழ்வின் ஒரு அங்கமாக நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.