தேசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் 2023ஆம் ஆண்டுக்கான போட்டியில் இலங்கை விமானப்படை வில்வித்தை வீரர்கள் அதிக பதக்கங்களை வென்றனர்

ஏப்ரல் 12, 2023

அண்மையில் நடைபெற்ற 21வது தேசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் 2023ஆம் ஆண்டுக்கான போட்டியில் இலங்கை விமானப்படையின் பெண்கள் வில்வித்தை வீரர்கள் அதிக பதக்கங்களை வென்றுள்ளனர் என இலங்கை விமானப்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

தியகம மகிந்த ராஜபக்ச மைதானத்தில் ஏப்ரல் 06 (2023) அன்று நடைபெற்ற சாம்பியன்ஷிப் போட்டியில் 70மீற்றர் ரிகர்வ் குழு போட்டியில் இலங்கை விமானப்படையின் மகளிர் அணி முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதன்படி, இந்த ஆண்டு தேசிய சாம்பியன்ஷிப்பில் இலங்கை விமானப்படை வில்வித்தை வீரர்கள் பின்வரும் இடங்களை வென்றனர்.

ரிகர்வ் 70மீ மகளிர் தனிநபர் போட்டி - வெள்ளிப் பதக்கம்

கோப்ரல் உதயங்கனி யு.ஏ.என்

ரிகர்வ் 70மீ மகளிர் தனிநபர் போட்டி - வெண்கலப் பதக்கம்

லீடிங் விமானப் பெண்மணி ஆரியரத்ன டி.எஸ்.எல்

பெண்கள் ரிகர்வ் 70மீ குழு நிகழ்வு - தங்கப் பதக்கம்

கோப்ரல் உதயங்கனி யு.ஏ.என்

கோப்ரல் எதிரிசிங்க ஈ.எம்.வி.சி

லீடிங் விமானப் பெண்மணி சில்வா எம்.எச்.எம்

பெண்களுக்கான ரீகர்வ் 70 மீ குழு நிகழ்வு - வெண்கலப் பதக்கம்

லீடிங் விமானப் பெண்மணி சதுரிகா எம்.ஏ.டி.டி.

லீடிங் விமானப் பெண்மணி ஆரியரத்ன டி.எஸ்.எல்

லீடிங் விமானப் பெண்மணி செய்னரத்ன ஜி.ஜி.எஸ்.எஸ்

ரிகர்வ் 70மீ கலப்பு அணி போட்டி - வெண்கலப் பதக்கம்

லீடிங் விமானப்படை வீரர் அதபத்து ஏ.எம்.எஸ்.எஸ்

லீடிங் விமானப் பெண்மணி ஆரியரத்ன டி.எஸ்.எல்

ரிகர்வ் 70மீ ஆண்கள் அணி போட்டியில் வெண்கலம் - பதக்கம்

சார்ஜன்ட் குமாரசிங்க எஸ்.ஜி.டி.பி

லீடிங் விமானப்படை வீரர் அதபத்து ஏ.எம்.எஸ்.எஸ்

லீடிங் விமானப்படை வீரர் திலகரத்ன யு.எஸ்.பி