தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு பாதுகாப்பு அமைச்சின் செயற்பாடுகளை சம்பிரதாய பூர்வமாக மீள ஆரம்பிக்கும் நிகழ்வில் பாதுகாப்பு உயர் அதிகாரிகள் பங்கேற்பு

ஏப்ரல் 17, 2023
  • தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு கொண்டாட்டத்தை தொடர்ந்து பாதுகாப்பு அமைச்சு அதன் பணிகளை ஆரம்பித்தது.

பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன மற்றும் அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சித்ராணி குணரத்ன ஆகியோரின் அழைப்பின் பேரில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான திரு. சாகல ரத்நாயக்க ஆகியோர் பாதுகாப்பு அமைச்சு வளாகத்தில் இன்று காலை (ஏப்ரல் 17) இடப்பெற்ற தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் அமைச்சில் பணிபுரியும் சிவில் மற்றும் இராணுவ ஊழியர்கள் பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

இதன்போது இராஜாங்க அமைச்சர் தென்னகோன், ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் திரு. சாகல ரத்நாயக்க மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் குணரத்ன ஆகியோர் அமைச்சின் ஊழியர்களுடன் புத்தாண்டு கொண்டாட்ட மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.

இந்த நிகழ்வைத் தொடர்ந்து, பாதுகாப்பு உயர் அதிகாரிகள் அமைச்சின் ஊழியர்களுக்கு தமது ‘சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு’ வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், பின்னர் அமைச்சின் ஊழியர்கள் சுப நேரத்தில் அவர்களது பணிகளை ஆரம்பித்தனர்.

புத்தாண்டு கொண்டாட்டங்களுடன் தொடர்புடைய பல பாரம்பரிய நிகழ்வுகளும் இதன்போது நடைபெற்றமை மேலும் சிறப்பம்சமாகும்.

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டத்தைத் தொடர்ந்து இன்று, ஏப்ரல் 17 (திங்கட்கிழமை) ‘வேலைக்குச் செல்வதற்கான’ நாளாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.