--> -->

அவுஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து இராணுவப் படைகளின் (அன்சக்) நினைவேந்தல் நடைபெற்றது

ஏப்ரல் 25, 2023

முதலாம் உலகப் போரில் சிலோன் பிளாண்டர்ஸ் ரைபிள் படையணியின் உறுப்பினர்களைக் கொண்ட ‘அன்சக்’ தலைமையிலான நேச நாட்டுப் படைகளின் போர் வீரர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தன்னலமற்ற தியாகங்களையும் நினைவுகூரும் நிகழ்வு இன்று (ஏப்ரல் 25) கொழும்பு 05 இல் உள்ள ஜாவத்தே மயானத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் அவர்களும் கலந்து சிறப்பித்தார்.

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் அதிமேதகு திரு. போல் ஸ்டீபன்ஸ், நியூசிலாந்திற்கான உயர் ஸ்தானிகர் அதிமேதகு மைக்கேல் எப்பில்டன், துருக்கியின் தூதுவர் அதிமேதகு திருமதி டெமெட் செகெர்சியோகுளு, பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரி ஜெனரல் சவேந்திர சில்வா, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா மற்றும் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன ஆகியோர் இந்நிகழ்வில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

ஆஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து இராணுவப் படைகள் (அன்சக்) தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 25ஆம் திகதி நினைவுகூரப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சமயப் பிரமுகர்கள், உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் மற்றும் முப்படை அதிகாரிகள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.