இலங்கை கடலோர காவல்படையினரால் மேலும் கடல் கடலாமை
குஞ்சுகளை கடலுக்கு விடுவிப்பு

ஏப்ரல் 26, 2023

இலங்கை கடலோர காவல்படையினரால் மற்றுமொரு தொகுதி கடலாமை குஞ்சுகள் அண்மையில் கடலுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது.

மிரிஸ்ஸ மற்றும் ஹிக்கடுவையில் உள்ள உயிர்காக்கும் நிலைகளில் பணிபுரியும் இலங்கை கடலோர காவல்படை பணியாளர்களால், 1139 கடலாமை முட்டைகள் இயற்கை வாழ்விடங்களில் இருந்து வெளியெடுக்கப்பட்டது பாதுகாப்பாக அடைகாக்கப்பட்டது என இலங்கை கடலோர காவல்படை ஊடகம் தெரிவித்துள்ளது.

மேலும், வெள்ளவத்தை, கல்கிசை, பாணந்துறை, மிரிஸ்ஸ, ஹிக்கடுவ, மொரகல்ல மற்றும் தெஹிவளை ஆகிய கடற்கரைகளில் இருந்தும் இக்காலப்பிரிவில் 3714 கடல் ஆமை குஞ்சுகள் கடலில் விடுக்கப்பட்டுள்ளது.

கடலோரக் காவல் படையின் கடலாமை பாதுகாப்புத் திட்டத்தின் (CGTCP) கீழ், கடல் ஆமைகளின் இயற்கையான வாழ்விடங்களில் கடலாமை முட்டைகளைப் பாதுகாக்க பெரும் முயற்சி எடுக்காப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இலங்கை கடலோர காவல்படையின் தகவல்களுக்கமைய, கடலோர காவல்படை இந்த ஆண்டில் மட்டும் 46040 கடலாமை முட்டைகளை பாதுகாத்து 26722 கடலாமை குஞ்சுகளை கடலில் விடுவித்துள்ளது.