பாதுகாப்பு செயலாளர் கடற்படை தளத்திற்கு விஜயம்

டிசம்பர் 12, 2020

திருகோணமலையில் உள்ள கடற்படைத் தளத்திற்கு பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் ஓய்வு  கமல் குணரத்ன இன்றைய தினம் விஜயம் ஒன்றினை மேற்கொண்டார்.

கிழக்கு கடற்படை கட்டளையகத்துக்கு வருகைதந்த உயர்மட்ட அதிகாரிகளை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன மற்றும் கிழக்கு  கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் ருவன் பெரேரா ஆகியோர் வரவேற்றனர்.

மேலும் வருகை தந்த உயர்மட்ட அதிகாரிகளுக்கு கிழக்கு பிராந்திய கட்டளையக ஆளுகை பிரதேசம் தொடர்பாக ரியர் அட்மிரல் பெரேரா மற்றும் கடற்படை திணைக்களங்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட கடற்படை அதிகாரிகளினால் விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.

அத்துடன் இந்த நிகழ்வை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டது.

இந்த நிகழ்வினை தொடர்ந்து பாதுகாப்பு செயலாளர் திருகோணமலை துறைமுக நகரத்தின் கடற்படை ஆளுகை பிரதேசத்திற்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றினை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.