--> -->

இலங்கை இராணுவப் படையினரால் முல்லைத்தீவு
நோயாளர்களுக்கு இரத்த தானம்

மே 04, 2023

நோயாளிகளின் இரத்த தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் எதிர்வரும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு, முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படையினர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை அதிகாரிகளுடன் இணைந்து, கடந்த மே 1ஆம் திகதி முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக வளாகத்தில் இரத்ததான நிகழ்வினை மேற்கொண்டனர் என இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன்போது முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் சேவையாற்றும் 120க்கும் மேற்பட்ட படையினர் இரத்த தானம் செய்ய முன்வந்தது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, வைத்தியசாலை பணிப்பாளரின் வேண்டுகோளுக்கு இணங்க தேசிய டெங்கு தடுப்பு வாரத்தினை முன்னிட்டு 592ஆவது காலாட்படை படையணியில் கடமையாற்றும் படையினர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை வளாகத்தில் டெங்கு தடுப்பு நிகழ்ச்சி ஒன்றையும்  அண்மையில் மேற்கொண்டனர் என இராணுவ வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.