பதில் பாதுகாப்பு அமைச்சராக இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளார்

மே 04, 2023

மூன்றாம் சார்ள்ஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் கலந்துகொள்வதற்காக கௌரவ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் இன்று (04) காலை இலங்கையிலிருந்து பிரித்தானியாவிற்கு பயணமானார்.

மேற்படி முடிசூட்டு விழாவானது இம்மாதம் 06ஆம் திகதி சனிக்கிழமை காலை 11.௦௦ மணிக்கு வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் தொடங்கவுள்ளது.

இதன்படி, பதில் பாதுகாப்பு அமைச்சராக இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.