பாதுகாப்பு அமைச்சில் வெசாக் பௌர்ணமியை முன்னிட்டு தம்ம பிரசங்கம்

மே 04, 2023

எதிர்வரும் வெசாக் பௌர்ணமி போயா கொண்டாட்டத்தை முன்னிட்டு இன்று (மே 04) பாதுகாப்பு அமைச்சின் வளாகத்தில் விசேட ‘தம்ம’ பிரசங்கம் நடைபெற்றது.

வணக்கத்துக்குரிய உடுதும்பர காஷ்யப தேரர் அவர்களின் தலைமையில் காலை நடைபெற்ற பன பிரசங்க அமர்வில் அமைச்சுப் பணியாளர்கள் பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன அவர்கள் பாதுகாப்பு அமைச்சுக்கு வருகை தந்த தேரரை வரவேற்று, சமய வழிபாடுகளை பின்பற்றி பன பிரசங்கத்தை நடத்துமாறு அழைப்பு விடுத்தார்.

பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவி சித்ராணி குணரத்ன, அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், இராணுவம் மற்றும் சிவில் ஊழியர்கள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.