பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருக்கு போர் வீரர்களின் கொடி அணிவிப்பு

மே 08, 2023

போர் வீரர்கள் நினைவு மாதத்தினை முன்னிட்டு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித பண்டார தென்னகோன் அவர்களுக்கு இன்று (மே 08)  போர்வீரர்களின் கொடி அணிவிக்கப்பட்டது.

ரணவிரு சேவா அதிகாரசபையின் தலைவர் மேஜர் ஜெனரல் நந்தன சேனாதீர (ஓய்வு) தலைமையிலான குழுவினர், கொழும்பில் உள்ள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரை சந்தித்த போது அவர் மீது போர்வீரர்களின் கொடி அணிவிக்கப்பட்டது.

பணிப்பாளர் மேஜர் ஜெனரல் கித்சிறி ஏகநாயக்க (ஓய்வு) மற்றும் பிரிகேடியர் ரொஷான் திரிமான்ன உட்பட ரணவிரு சேவா அதிகாரசபையின் அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.