இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து எகிப்திய தூதுவர் கலந்துரையாடல்

மே 13, 2023

இலங்கைக்கான எகிப்திய தூதுவர் அதிமேதகு மகெட் மொஸ்லே இன்று (மே 12) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவைச் சந்தித்தார்.

பாதுகாப்பு அமைச்சுக்கு வருகை தந்த எகிப்திய தூதுவர் பாதுகாப்புச் செயலாளரினால் வரவேற்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற சந்திப்பின் போது, இரு நாடுகளுக்குமிடையிலான நீண்டகால ஒத்துழைப்பை மேம்படுத்தவும் இருதரப்பு உறவுகளையும் மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக சுமுகமாக கலந்துரையாடப்பட்டது.

மேலும், பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து பாராட்டு தெரிவித்த எகிப்திய தூதுவர், இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவது குறித்தும் இச்சந்திப்பின் போது கலந்துரையாடினார்.

இந்த சந்திப்பை நினைவுகூரும் வகையில், பாதுகாப்பு செயலாளர் மற்றும் எகிப்திய தூதுவர் ஆகியோருக்கிடையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டது.

இச்சந்திப்பில் பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி பிரிகேடியர் தம்மிக்க வெலகெதரவும் கலந்துகொண்டார்.