இந்திய கடற்படை கப்பல் திருகோணமலையை வந்தடைந்தது

மே 17, 2023

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு, இந்திய கடற்படைக் கப்பல் (ஐஎன்எஸ்) 'பட்டி மால்வ்' செவ்வாய்க்கிழமை (மே 16) திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தது. இலங்கை கடற்படை (SLN) ஊடக தகவல்களுக்கமைய , இலங்கை வந்தடைந்த இக்கப்பலுக்கு கடற்படை மரபுகளுக்கு இலங்கை கடற்படையினரால் வரவேற்பளிக்கப்பட்டது.

46 மீ நீளமுள்ள மற்றும் 101 பணியாளர்களை கொண்ட இக்கப்பலின் கட்டளை அதிகாரியாக லெப்டினன்ட் கமாண்டர் MAN சிங் M மானே கடமையாற்றுகிறார். திருகோணமலையில் உள்ள சிறப்புப் படகு படைத் தலைமையகத்தில் இக்கப்பலின் பணியாளர்கள் தேடல் மற்றும் கைப்பற்றுதல் (VBSS) பயிற்சி ஒன்றிலும் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

புதன்கிழமையன்று (மே 17) இலங்கையிலிருந்து புறப்படுவதற்கு முன், 'பட்டி மால்வ்' திருகோணமலையில் இலங்கை கடற்படை கப்பலொன்றுடன் கடவுப் பயிற்சியில் (PASSEX) ஈடுபடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.