சின்ன சிப்பிகுளம் பிரதேசத்தில் இராணுவத்தினரால் 300 மரக்கன்றுகள் நடுகை

டிசம்பர் 13, 2020

சின்ன சிப்பிகுளம் பகுதியில் இராணுவத்தின் 213 ஆவது பிரிகேட் படையினரால் சுமார் 300ற்கு மேற்பட்ட  வேம்பு, நாகை, மா ஆகிய மரங்கள் நடுகை செய்யப்பட்டன.

இந்த மரம் நடுகை செயற்திட்டம் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 21ஆவது பிரிவின் போது கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகேவின் பணிப்புரைக்கு அமைய முன்னெடுக்கப்பட்டது.

இராணுவ தளபதியின்  'துரு மிதுரு - நவ ரடக்' தேசிய மரநடுகை செயற்திட்டத்துக்கு அமைவாக வன பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளுடன் இணைந்து  இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் 213வது பிரிகேட்டின் தளபதி பிரிகேடியர் ரசிக  குமார, 5வது இலங்கை இலேசாயுத படையணியின் கட்டளைத்தளபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.