நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் ஆசி வேண்டி நடத்தப்பட்ட 'ஜெய பிரித்' ஆசிர்வாத நிகழ்வு நிறைவு பெற்றது

மே 21, 2023

•   சந்தஹிரு சேயா மற்றும் ஜெய பிரித் ஆகிய இரண்டுக்கும் நாடு நன்றியுணர்வைக் தெரிவிக்கிறது.

நாடு, நாட்டு மக்கள், உயிர்த் தியாகம் செய்த படைவீரர்கள் மற்றும் அங்கவீனமுற்ற படைவீரர்களுக்கு ஆசிர்வாதம் வழங்கும் வருடாந்த ‘ஜெய பிரித்’ பாராயணம் செய்யும் நிகழ்வு சந்தஹிரு சேயா வளாகத்தில் இடம்பெற்றது.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன ஆகியோர் தலைமையில் இன்று (21) இடம்பெற்றது.

இதேவேளை, கடந்த காலத்திலிருந்து பயன்படுத்தப்பட்டு வரும் தீய சக்திகளை ஒழிப்பதற்கும் தீய தாக்கங்கள் மற்றும் தொற்றுநோய்களில் சமூகத்தைப் பாதுகாப்பதற்கும் பலத்த பாதுகாப்பு நடவடிக்கையாக ‘ரத்தின சூத்திரம்’ பாராயணம் நேற்று மாலை (20) இடம்பெற்றது.

அத்துடன், ஜெய பிரித்துடன் தொடர்புடைய சம்பிரதாயமான அன்னதானம் மகா சங்கரத்தினருக்கு இன்று காலை வழங்கப்பட்டது.

சமய ஆசிர்வாதம் வழங்கும் இந்த நிகழ்வில், பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரி, முப்படைத் தளபதிகள் மற்றும் உயர்மட்ட அரச மற்றும் இராணுவ அதிகாரிகள் மற்றும் விசேட அதிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தாய்நாட்டிலிருந்து மிலேச்சத்தனமான பயங்கரவாதத்தை முற்றாக அழித்தொழிப்பதற்காக முன்னோக்கிச் செல்லும் முப்படைகளுக்கு ஆசிர்வாதம் வழங்கும் வகையில் வருடாந்த ஜெயபிரித் பாராயணம் செய்யும் இந்த நிகழ்வு 2008 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் புனிதப் பெட்டியை 'பிரித் மண்டபத்திற்கு' சமய அனுஷ்டானங்களுடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டதுடன் வண. மகா சங்கத்தினர்களினால் பீரித் ஓதல் ஆரம்பித்து வைக்கப்பட்டது .

இராஜாங்க அமைச்சர் தென்னகோனின் அழைப்பின் பேரில் வண.ரலபனவே தம்மஜோதி நாயக்க தேரர் இதன்போது ஆரம்ப உரையையும் அனுஷாசனத்தையும் (மத சொற்பொழிவு) நிகழ்த்தினார்.

வண.பல்லேகம ஹேமரதனாபிதான நாயக்க தேரர் தலைமையில் வண.ரலபனாவே தம்மஜோதி நாயக்கர் மற்றும் வெலிஹேனே சோபித நாயக்க தேரர் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் சமய சடங்குகள் இடம்பெற்றன.

உயிரிழந்த போர்வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அங்கவீனமுற்ற படைவீரர்கள் ஆகியோர் முப்படையினருக்கு ஆசிர்வாதம் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இந்த சமய ஆசி வழங்கும் நிகழ்வில் சிவில் பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் நாயகம், சிரேஷ்ட முப்படை மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள், போர்வீரர்கள், உயிரிழந்த போர்வீரர்களின் குடும்பங்கள் மற்றும் பெருந்தொகையான பக்தர்கள் கலந்துகொண்டனர்.