ஓவியர் ஒருவரினால் தேசிய போர் வீரர்களின் நினைவேந்தலை முன்னிட்டு ஓவியங்கள் கண்காட்சி

மே 22, 2023

போர் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, தற்போது இத்தாலி நாட்டின் நேப்லெஸில் பணிபுரிந்துவரும் ஓவியரான செனவிரத்ன தசநாயக்க அவர்களின் ஓவியக் கண்காட்சி மே 21இல் சென். அந்தோணி சர்வதேச பாடசாலையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த கண்காட்ச்சியில், போர் வீரர்கள், போர்க்கால முப்படைகளின் தளபதிகள் மற்றும் முப்பது ஆண்டுகால கொடூரமான போரின் போது உயிர் தியாகம் செய்தவர்கள் உட்பட எண்பதுக்கும் மேற்பட்ட ஓவியங்களை அவர் காட்சிப்படுத்தியுள்ளார்.

எமது தாய்நாட்டில் பல்வேறு யுத்த நடவடிக்கைகளின்போது பொதுமக்களின் பாதுகாப்பிற்காக இராணுவத்தினர் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் தியாகங்கள் பங்களிப்புகள் மற்றும் இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்ற விசேட நிகழ்வுகளையும் ஓவியமாக வரைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.