ஆழ்கடலில் விபத்துக்குள்ளான சீன மீன்பிடிக் கப்பலைத் தேடும் மற்றும் மீட்கும் பணிக்காக இலங்கை கடற்படை பங்களித்தது

மே 24, 2023

இலங்கைக்கு தெற்கு பகுதியில் உள்ள அவுஸ்திரேலிய தேடுதல் மற்றும் மீட்புப் வலயத்துக்கு சொந்தமான ஆழ்கடலில் 2023 மே 16 ஆம் திகதி கவிழ்ந்த 'LU PENG YUAN YU 028' என்ற சீன மீன்பிடிக் கப்பலைத் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையில் பங்களிக்க கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் அறிவுறுத்தல்களின் படி இலங்கை கடற்படைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் விஜயபாகு ஆழ்கடல் கண்கானிப்பு கப்பலுடன் கடற்படையின் சுழியோடி குழவொன்று சீன மீன்பிடி கப்பல் விபத்துக்குள்ளான கடல் பகுதிக்கு அனுப்பப்பட்டது.

கடலில் பாதிக்கப்படும் கப்பல்களின் மற்றும் படகுகளில் உள்ள கடற்பயணிகளின் உயிரைக் காப்பாற்றுவதற்காக ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச மரபுகளுக்கு இணங்க, கொழும்பு கடற்படைத் தலைமையகத்தில் நிறுவப்பட்ட கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையம், இலங்கையின் கடல்சார் தேடல் மற்றும் மீட்பு வலயத்தில் மற்றும் சர்வதேச கடற்பரப்பில் அருகிலுள்ள கடல்சார் தேடுதல் மற்றும் மீட்பு பகுதிகளில் கடல் மற்றும் மீனவ சமூகத்திற்கு நிவாரணம் வழங்க தேவையான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அதன்படி, 'LU PENG YUAN YU 028' என்ற சீன மீன்பிடிக் கப்பலை, அது இருந்த கடல் பகுதியில், பிராந்திய நாடுகளின் கடல்சார் தேடுதல் மற்றும் மீட்பு மையங்கள், தேடுதல் மற்றும் மீட்பு பணிகளை ஏற்கனவே துவங்கி இருந்தன. விஜயபாகு கப்பலுக்கு அருகில் மிதந்து கொண்டிருந்த கவிழ்ந்த மீன்பிடிக் கப்பலுக்குள் வான்வெளியில் சிக்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் பணியாளர்களை மீட்பதற்காக இலங்கை கடற்படையின் சுழியோடி குழுவினர் சுழியோடி நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர். கடற்பரப்பின் மோசமான தன்மைக்கு மத்தியில் மூன்று (03) நாட்களாக மிகக் கடினமான சிழியோடி நடவடிக்கையை மேற்கொண்ட கடற்படையினர், கேப்டனின் அறை மற்றும் தங்கும் பகுதியிலிருந்து 02 சடலங்களை மீட்டு முறையான ஒப்பந்தத்தின் படி, அந்த இடத்தில் இருந்த சீன இழுவை கப்பலான De Tian இடம் ஒப்படைத்தனர்.

மேலும், மீன்பிடிக் கப்பலின் பணியாளர்கள் தங்கும் அறைகள் மற்றும் ஏனைய பெட்டிகளில் பன்னிரெண்டு (12) சிதைந்த சடலங்கள் கடற்படையினரால் அடையாளம் காணப்பட்ட போதிலும், சடலங்களின் சிதைந்த தன்மை மற்றும் இலங்கை கடற்படை சுழியொடி நபர்களுக்கு ஏற்படும் சுகாதார அபாயம் காரணமாக பன்னிரெண்டு (12) சடலங்களின் இருப்பிடங்களை வரைபடமாக்கிய கடற்படை சுழியோடி குழு தகவல் மற்றும் வரைபடங்கள் மற்றும் எதிர்கால திட்டங்களை எவ்வாறு செயல்படுத்துவது மற்றும் மூழ்கடிப்பவர்கள் பாதுகாப்பாக நுழைந்து வெளியேறும் நுழைவாயில்கள் பற்றிய விரிவான விளக்கமொன்று சீன சுழியோடி நபர்களை ஏற்றிக்கொண்டு அந்த இடத்திற்கு வந்த ‘MV SHANDONG DE LONG’ கப்பலின் கேப்டன் உட்பட சுழியோடி குழுவிடம் இன்று (2023 மே 23) வழங்கியது.

மேலும், சீன மீன்பிடி கப்பலில் சிக்கிய மீனவர்களை தேடும் பணியில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட சுழியோடி பணியை முடித்துக்கொண்டு இலங்கை கடற்படை கப்பல் விஜயபாகு 2023 மே 22 அன்று கொழும்பு துறைமுகத்துக்கு திரும்பும் பயணத்தைத் தொடங்கியது

நன்றி - www.navy.lk